Wednesday, September 23, 2009

சிறுக‌தைப்ப‌ட்ட‌றையும்,நான் ர‌சித்த‌ சிறுக‌தைக‌ளும்

சிறுக‌தை ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லையே என்ற வ‌ருத்த‌ம் நேற்றோடு த‌ணிந்த‌து.ப‌த்ரி அவ‌ர்க‌ள் அவ‌ர‌து வ‌லையில் சிறுக‌தை ப‌ட்ட‌றையின் ஆடியோ/வீடியோ இர‌ண்டையும் ப‌திவு செய்து சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

இங்கே சொடுக்குக‌ !

அதிலும் குறிப்பாக‌ பா.ராக‌வ‌னின் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கான செஷன் ஸ்லைடு ஷோவோடு தெளிவாக‌ வ‌ந்திருக்கிற‌து.(வீடியோ கிடையாது)

அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளில் எழுத‌ நினைக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌ன‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.குறிப்பாக‌ "உங்க‌ளுக்கு பிடித்த‌ சிறுக‌தைக‌ளை அல‌சி ஆராய்ந்து ஏன் உங்க‌ளுக்கு அந்த‌ க‌தைக‌ள் பிடித்திருந்த‌து என‌ க‌ட்டுடைத்து பாருங்க‌ள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறே செய்து பார்க்க‌லாம் என‌வும் தோன்றிய‌து.அத‌ன்ப‌டி நான் மிகவும் ர‌சித்த,என்னை மிக‌வும் பாதித்த‌ சிறுக‌தைக‌ளை ப‌ட்டிய‌லிட்டிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் இவைக‌ளையும் வாசித்து பார்க்க‌வும்.மேலும் நீங்க‌ள் இந்த‌ சிறுக‌தைக‌ளை ஏற்கென‌வே ப‌டித்திருந்தாலும் பின்னூட்ட‌த்தில் அதைப்ப‌ற்றி அல‌ச‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் தெரிந்து கொள்வ‌ர்.

1) செவ்வாழை அண்ணாதுரை
2) ந‌க‌ர‌ம் சுஜாதா
3) தீவுக‌ள் க‌ரையேறுகின்ற‌ன‌ சுஜாதா
4) பாட்டையா மேலாண்மை பொன்னுச்சாமி
5) பாய‌ம்மா பிர‌ப‌ஞ்ச‌ன்
6) புய‌ல் அகில‌ன்
7) பொம்மை ஜெய‌காந்தன்
8) க‌த‌வு கி.ரா
9) இன்னும் கிளிக‌ள் மாத‌வ‌ராஜ்
10) ஐந்தில் நான்கு நாஞ்சில் நாட‌ன்
11) குற‌ட்டை ஒலி டாக்ட‌ர் மு.வ‌ர‌த‌ராச‌னார்
12) கால்க‌ள் சுஜாதா
13) இந்த‌ ந‌க‌ரிலும் ப‌ற‌வைக‌ள் இருக்கின்ற‌ன‌. எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
14) ந‌ட‌ந்து செல்லும் நீருற்று எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
15) சிவப்பா உய‌ர‌மா மீசை வ‌ச்சுக்காம‌ ஆத‌வ‌ன்
16) ஒரு அறையில் இர‌ண்டு நாற்காலிக‌ள் ஆத‌வ‌ன்
17) பீங்கான் நாரைக‌ள் எஸ்.ராமகிருஷ்ண‌ன்
18) கிடா நாற்றம் மாத‌வ‌ராஜ்
19) த‌வ‌ம் அய்க்க‌ண்
20) ப‌ல்லி மெல‌ட்டூர் ந‌ட‌ராச‌ன்
21) ஸார் நாம‌ போயாக‌ணும் ச‌த்ய‌ராஜ்குமார்

இந்த‌ க‌தைக‌ளை நான் ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ள் வேறுவேறாக‌ இருப்ப‌தால் எந்த‌ குறிப்புக‌ளுமின்றி
நினைவில் வைத்தே எழுதுகிறேன்.ஆசிரிய‌ர்-க‌தைக‌ள் பெய‌ர்க‌ள் த‌வறெனில் பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌லாம்.

கி.ரா,ஆத‌வ‌ன்,ஜெய‌காந்த‌ன்,சுஜாதா இவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் ஏறத்தாழ‌ அனைத்துமே குறிப்பிட‌த்த‌க்க‌வை.அவைக‌ளை த‌னித்த‌னியாக‌ அல‌ச‌வும் திட்ட‌மிட்டிருக்கிறேன்.இணைந்திருங்க‌ள்.

***********

Sunday, July 19, 2009

livingsmile

"நான் விரும்பாத‌ இந்த அடையாள‌த்தை எதைக் கொண்டு அழிப்பேன்? பாம்பு த‌ன்
ச‌ட்டையை உரித்தெறிவ‌து போல‌ இந்த‌ என் உட‌லைக் க‌ழ‌ட்டி எறிய‌ முடிந்தால்
எத்த‌னை ந‌ன்றாக‌ இருக்கும்? என் சுய‌ம்,என் அடையாள‌ம்,என் உண‌ர்வுக‌ள்,
என் க‌ன‌வுகள்,என் உயிர் எப்ப‌டி மீட்க‌ப் போகிறேன் ?ஆயிர‌ம் அவ‌மான‌ங்க‌ள்,கோடி ர‌ண‌ங்க‌ள்,கிண்ட‌ல்க‌ளில் எத்த‌னை முறை செத்து மீண்டிருக்கிறேன் !
அனைத்தையும் மீறி நீண்ட‌ என் ப‌ய‌ண‌த்துக்கு ஒரே ஒரு அர்த்த‌ம் தான்.என‌க்குப்
பொருத்த‌மான‌ உட‌லை நான் க‌ண்டெடுத்து விட்டேன். !"

Tuesday, July 14, 2009

சுவார‌ஸ்ய‌ வ‌லைப்ப‌திவு விருது

ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில் க‌ட்டுரை போட்டிக‌ளில் தொடர்ந்து மூன்று வருடங்கள் முதல் பரிசு வாங்கியவன் என்ற ஒரே அற்ப‌ த‌குதியை மட்டுமே ஆதாரமாக வைத்து,வ‌லைத‌ள‌த்தில் எழுத‌ வ‌ந்த‌ என‌க்கு கிடைக்கும் சிறிய‌, பெரிய‌ அங்கீகார‌ங்க‌ள் உண்மையிலே அவ‌ற்றிற்கு நான் த‌குதியான‌வனா என்ற‌ சிந்த‌னையை அவ்வப்பொழுது தூண்டுவதுண்டு.அது ஒருபுறமிருக்க..

அண்ணன் செந்த‌ழ‌ல் ர‌வி மூலமாக,நான் விரும்பி வாசிக்கும் பதிவர் அமித்து அம்மா என்னையும் சுவார‌சிய‌ ப‌திவ‌ர் ப‌ட்டிய‌லில் சேர்த்து,என் ப‌திவுக‌ளுக்கும் வாகைப்பூ சூட்டியிருக்கிறார்.பெருமையாக‌ உண‌ர்கிறேன்.

அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி !!!!

என‌வே இந்த‌ ச‌ங்கிலித்தொட‌ர் ச‌ம்பிர‌தாய‌த்தை க‌ர்ம‌சிர‌த்தையோடு நிறைவேற்றும் சீரிய‌ ப‌ணி என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.தொட‌ர்ப‌திவு என்ற‌வுட‌ன்,ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் கூப்பிட்டு,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு விருப்ப‌மில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக,இந்த‌ விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.


இவ‌ர்க‌ளுக்கு விருது வ‌ழ‌ங்க‌ நான் த‌குதியான‌வ‌னா என்ற‌ கேள்வி உள்ளுக்குள்
பீடிகை போட‌த்தான் செய்கிற‌து.எது எப்ப‌டியாக‌ இருந்தாலும் இவ‌ர்கள் தான் என் எழுத்துக‌ளை சுத்திக‌ரித்து கொண்டிருப்பவர்கள்.ம‌றைமுக‌மாக‌ என‌க்கு பாட‌ம் ந‌ட‌த்தி கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.யாரெல்லாம் ?

பீமோர்க‌னின் "வ‌ழிப்போக்க‌ன்"

என்னை அடித்து துவைத்த‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.அவ‌ருடைய
"ச‌முத்திர‌த்தில் மீன்க‌ளை வ‌ரைப‌வ‌ன்" ப‌திவின் அனைத்து வ‌ரிக‌ளும் என‌க்கு ம‌ன‌ன‌ம்.த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ரை அதிக‌ம் தெரியாது என்றாலும், இவ‌ர் எழுத்துக்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன்.

ஆடுமாடு

ம‌ண்வாச‌னை மிக்க சிறுக‌தைக‌ளை ம‌ட்டுமே எழுதுகிறார்.

சுவார‌சிய‌மான‌ எழுத்துக‌ளை வாசிக்கும்போது,என்னைய‌றியாம‌ல் ந‌க‌ங்க‌ளால் என் உத‌டுக‌ளை கிள்ளுவ‌துண்டு.அந்த‌ வ‌கையில் உதட்டில் இர‌த்த‌ம் வ‌ரும‌ளவு,ப‌டிக்க‌ வைத்து புண்ணாக்கிய‌வ‌ர் ஆடுமாடு.அவ‌ர் ப‌திவுகளுக்கு பின்னூட்ட‌மிடும் அளவுக்காவ‌து நான் த‌குதிய‌டைய‌ வேண்டும் என்று முய‌ற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

லேகாவின் "யாழிசை ஓர் இல‌க்கிய‌ ப‌ய‌ணம்"

எஸ்.ரா.வின் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ டாப்டென் வ‌லைப்பூக்க‌ளில் யாழிசையும் ஒன்று.த‌மிழின் குறிப்பிட‌த்தக்க ப‌டைப்புக‌ளை அறிமுக‌ம் செய்து வைத்து,த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌குக்கு ச‌த்த‌மில்லாம‌ல் ஒரு சேவையை செய்து வ‌ருகிறார் லேகா.ந‌ல்ல‌ படைப்புக‌ளுக்கான‌ தேட‌ல்க‌ளுக்கு லேகாவின் வ‌லைப்பூ ஒரு முற்றுப்புள்ளி.நேர‌ம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் ப‌திவ‌ர் இவ‌ர்.இவ‌ருடைய‌ ப‌ர‌ந்த‌ வாசிப்பை க‌ண்டு விய‌ந்திருக்கிறேன்.

ஆதிமூல‌கிருஷ்ண‌னின் "புல‌ம்ப‌ல்க‌ள்"

இவ‌ருடைய‌ ர‌க‌ளையான‌ த‌ங்க‌ம‌ணி ந‌கைச்சுவை ப‌திவுகள் அதிகம் பேச‌ப்ப‌ட்டாலும்,இவ‌ருடைய‌ குறுங்க‌தைகளைத் தான் நான் அதிக‌ம் ர‌சித்திருக்கிறேன்."நீ நான் அவ‌ள்" என்ற‌ ப‌திவை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்க‌ள்.துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள், சிறுக‌தை, மொக்கை என‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் சுண்டி இழுக்கும் டிபிக்க‌ல் ம‌சாலா+த‌ர‌ம் வாய்ந்த‌ வலைப்பூ இவ‌ருடைய‌து.ந‌ர்சிம்,ப‌ரிச‌ல் வ‌ரிசையில் இன்னுமொரு MR.CONSISTENT !

அக‌நாழிகை பொன்.வாசுதேவன்

வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளில் அதிக‌ம் தொட‌ர்புடைய‌வ‌ர் என ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்+பதிவர்.க‌தை சொல்லிக‌ளுக்கு கே.ர‌விஷ‌ங்கர் ஒரு ஆசிரிய‌ர் என்றால்,க‌விதை எழுதிக‌ளுக்கு வாசு அவ‌ர்க‌ள் ஒரு ஆசிரிய‌ர்.ப‌ல‌ ந‌ல்ல‌ த‌மிழ் வார்த்தைக‌ளை க‌ற்ப‌த‌ற்காக‌வே அவ‌ர் வ‌லைத‌ள‌த்துக்கு நான் அடிக்கடி செல்வ‌துண்டு.இவ‌ருடைய‌ "போடா ஒம்போது" க‌ட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்க‌வும்.முழுக்க‌ முழுக்க‌ அக்மார்க் த‌ர‌ம் வாய்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.

அனுஜ‌ன்யா

'க‌விதை எழுதி'க‌ளுக்கு ஒரு மான‌சீக‌ குரு.கீற்று,உயிரோசை,நவீன‌ விருட்ச‌ம் போன்ற‌ மின்னித‌ழ்க‌ளில் தொட‌ந்து இவ‌ருடைய‌ க‌விதைக‌ள் பிர‌சுர‌மாகின்ற‌ன‌.இவ‌ருடைய‌ "ரொட்டியும் மீன்க‌ளும்" க‌விதையை ப‌டித்து உறைந்து போனேன்.நீ சிகரெட் பிடிப்பியா என்று என் பெற்றோர்கள் சந்தேகிக்குமளவுக்கு நான் உதடு கிழித்து புண்ணாக்கியதற்கு இவருடைய‌ எழுத்துக‌ளும் ஒரு காரணம்.உரைந‌டையை எப்ப‌டி சுவார‌ஸிய‌மாக‌ கையாள்வ‌து எனக் க‌ற்று கொள்ள விரும்பும் புதிய‌வ‌ர்க‌ளுக்கு நான் முத‌லில் ப‌ரிந்துரைக்கும் வ‌லைப்ப‌க்கம் அனுஜன்யா அவ‌ர்க‌ளுடைய‌தாயிருக்கும்.

**************

சுவார‌ஸ்ய‌ வ‌லைப்ப‌திவு விருது

ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில் க‌ட்டுரை போட்டிக‌ளில் தொடர்ந்து மூன்று வருடங்கள் முதல் பரிசு வாங்கியவன் என்ற ஒரே அற்ப‌ த‌குதியை மட்டுமே ஆதாரமாக வைத்து கொண்டு,வ‌லைத‌ள‌த்தில் எழுத‌ வ‌ந்த‌ என‌க்கு கிடைக்கும் சிறிய‌, பெரிய‌ அங்கீகார‌ங்க‌ள் உண்மையிலே அவ‌ற்றிற்கு நான் த‌குதியான‌வனா என்ற‌ சிந்த‌னையை அவ்வப்பொழுது தூண்டுவதுண்டு.அது ஒருபுறமிருக்க..

அண்ணன் செந்தழல் ரவி மூலமாக, நான் விரும்பி வாசிக்கும் பெண்பதிவர் அமித்து அம்மா
என்னையும் சுவார‌சிய‌ ப‌திவ‌ர் ப‌ட்டிய‌லில் சேர்த்து,என் ப‌திவுக‌ளுக்கும் வாகைப்பூ சூட்டியிருக்கிறார்.பெருமையாக‌ உண‌ர்கிறேன்.

அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி !!!!

என‌வே இந்த‌ ச‌ங்கிலித்தொட‌ர் ச‌ம்பிர‌தாய‌த்தை க‌ர்ம‌சிர‌த்தையோடு நிறைவேற்றும் சீரிய‌ ப‌ணி என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.தொட‌ர்ப‌திவு என்ற‌வுட‌ன், ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் கூப்பிட்டு, த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு விருப்ப‌மில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக, இந்த‌ விருதுக‌ளுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று
அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.

"நீ என்ன‌டா என‌க்கு விருது கொடுக்கிற‌துன்னு?"

இவ‌ர்க‌ள் நினைத்து விட‌க்கூடும் என்ற‌ அச்ச‌ம் உள்ளுக்குள் இருக்க‌த்தான் செய்கிற‌து.
எதுவாக‌ இருந்தாலும் இவ‌ர்கள் தான் என் எழுத்துக‌ளை சுத்திக‌ரித்து கொண்டிருப்பவர்கள்.
ம‌றைமுக‌மாக‌ என‌க்கு பாட‌ம் ந‌ட‌த்தி கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.யாரெல்லாம் ?


பீமோர்க‌னின் "வ‌ழிப்போக்க‌ன்"

என்னை அடித்து துவைத்த‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.அவ‌ருடைய
"ச‌முத்திர‌த்தில் மீன்க‌ளை வ‌ரைப‌வ‌ன்" ப‌திவின் அனைத்து வ‌ரிக‌ளும் என‌க்கு ம‌ன‌ன‌ம்.
த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ரை அதிக‌ம் தெரியாது என்றாலும், இவ‌ர் எழுத்துக்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன்.

ஆடுமாடு

ம‌ண்வாச‌னை மிக்க சிறுக‌தைக‌ளை ம‌ட்டுமே எழுதுகிறார்.

சுவார‌சிய‌மான‌ எழுத்துக‌ளை வாசிக்கும்போது,என்னைய‌றியாம‌ல் ந‌க‌ங்க‌ளால் என் உத‌டுக‌ளை கிள்ளுவ‌துண்டு.அந்த‌ வ‌கையில் உதட்டில் இர‌த்த‌ம் வ‌ரும‌ளவு,ப‌டிக்க‌ வைத்து புண்ணாக்கிய‌வ‌ர் ஆடுமாடு.அவ‌ர் ப‌திவுகளுக்கு பின்னூட்ட‌மிடும் அளவுக்காவ‌து நான் த‌குதிய‌டைய‌ வேண்டும் என்று முய‌ற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

லேகாவின் "யாழிசை ஓர் இல‌க்கிய‌ ப‌ய‌ணம்"

எஸ்.ரா.வின் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ டாப்டென் வ‌லைப்பூக்க‌ளில் யாழிசையும் ஒன்று.
த‌மிழின் குறிப்பிட‌த்தக்க ப‌டைப்புக‌ளை அறிமுக‌ம் செய்து வைத்து,த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌குக்கு ச‌த்த‌மில்லாம‌ல் ஒரு சேவையை செய்து வ‌ருகிறார்.ந‌ல்ல‌ படைப்புக‌ளுக்கான‌ தேட‌ல்க‌ளுக்கு லேகாவின் வ‌லைப்பூ ஒரு முற்றுப்புள்ளி.நேர‌ம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் ப‌திவ‌ர் இவ‌ர்.இவ‌ருடைய‌ ப‌ர‌ந்த‌ வாசிப்பை க‌ண்டு விய‌ந்திருக்கிறேன்.

ஆதிமூல‌கிருஷ்ண‌னின் "புல‌ம்ப‌ல்க‌ள்"

இவ‌ருடைய‌ ர‌க‌ளையான‌ த‌ங்க‌ம‌ணி ந‌கைச்சுவை ப‌திவுகள் அதிகம் பேச‌ப்ப‌ட்டாலும்,இவ‌ருடைய‌ குறுங்க‌தைகளைத் தான் நான் அதிக‌ம் ர‌சித்திருக்கிறேன்."நீ நான் அவ‌ள்" என்ற‌ ப‌திவை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்க‌ள்.துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள், சிறுக‌தை, மொக்கை என‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் சுண்டி இழுக்கும் டிபிக்க‌ல் ம‌சாலா+த‌ர‌ம் வாய்ந்த‌ வலைப்பூ இவ‌ருடைய‌து.ந‌ர்சிம்,ப‌ரிச‌ல் வ‌ரிசையில் இன்னுமொரு MR.CONSISTENT !


அக‌நாழிகை பொன்.வாசுதேவன்

வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளில் அதிக‌ம் தொட‌ர்புடைய‌வ‌ர் என ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்+பதிவர்.க‌தை சொல்லிக‌ளுக்கு கே.ர‌விஷ‌ங்கர் ஒரு ஆசிரிய‌ர் என்றால்,க‌விதை எழுதிக‌ளுக்கு வாசு அவ‌ர்க‌ள் ஒரு ஆசிரிய‌ர்.ப‌ல‌ ந‌ல்ல‌ த‌மிழ் வார்த்தைக‌ளை க‌ற்ப‌த‌ற்காக‌வே அவ‌ர் வ‌லைத‌ள‌த்துக்கு நான் அடிக்கடி செல்வ‌துண்டு.இவ‌ருடைய‌ "போடா ஒம்போது" க‌ட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்க‌வும்.முழுக்க‌ முழுக்க‌ அக்மார்க் த‌ர‌ம் வாய்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.

அனுஜ‌ன்யா

'க‌விதை எழுதி'க‌ளுக்கு ஒரு மான‌சீக‌ குரு. கீற்று,உயிரோசை,நவீன‌ விருட்ச‌ம் போன்ற‌ மின்னித‌ழ்க‌ளில் தொட‌ந்து இவ‌ருடைய‌ க‌விதைக‌ள் பிர‌சுர‌மாகின்ற‌ன‌.இவ‌ருடைய‌ "ரொட்டியும் மீன்க‌ளும்" க‌விதையை ப‌டித்து உறைந்து போனேன்.நீ சிகரெட் பிடிப்பியா என்று என் பெற்றோர்கள் சந்தேகிக்குமளவுக்கு நான் உதடு கிழித்து புண்ணாக்கியதற்கு இவருடைய‌ எழுத்துக‌ளும் ஒரு காரணம்.உரைந‌டையை எப்ப‌டி சுவார‌ஸிய‌மாக‌ கையாள்வ‌து எனக் க‌ற்று கொள்ள விரும்பும் புதிய‌வ‌ர்க‌ளுக்கு நான் முத‌லில் ப‌ரிந்துரைக்கும் வ‌லைப்ப‌க்கம் அனுஜன்யா அவ‌ர்க‌ளுடைய‌தாயிருக்கும்.

**************

லிவிங் ஸ்மைல் வித்யா



நான் விரும்பாத என் அடையாளத்தை எதைக் கொண்டு அழிப்பேன்? பாம்பு தன்
சட்டையை கிழித்தெறிவது போல இந்த என் உடலைக் கழட்டி எறிய முடிந்தால் எத்தனை
நன்றாக இருக்கும்? என் சுயம்,என் அடையாளம்,என் உணர்வுகள்,என் கனவுகள்,என் உயிர் எப்படி மீட்கப் போகிறேன்? ஆயிரம் அவமானங்கள்,கோடி ரணங்கள்,கிண்டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன்! அனைத்தையும் மீறி நீண்ட என் பயணத்துக்கு ஒரே ஒரு அர்த்தம்தான்.எனக்குப் பொருத்தமான உடலை நான் கண்டெடுத்து விட்டேன்.

Tuesday, June 23, 2009

கொள்ளை-காரி



வழமையாய் சன்னல் தேடி வரும்
அடர்வெளிர் நிற பறவையொன்று
அதன் வெண்மையை இழந்திருந்தது;
மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட
டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;
கார்மேகங்களும் மெல்லிய மழைத்தூறல்களும்
வருகைப் பதிவேட்டில் காணாமற்போயிருந்தன;
சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை
இன்று பெருமளவு குறைந்திருந்தது;
சிறுகுழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக
செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன;
இரவோடு இரவாக பாணிபூரி
கடைகள் மாயமாகி போயின;
மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக
மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;
சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.

23-6-2009 கீற்று மின்ன‌த‌ழில் பிர‌சுர‌மான‌து.

****************

Sunday, May 17, 2009

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்



பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில், பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல், ஷேர் ஆட்டோக்க‌ளை நாடுப‌வ‌ர்கள், குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன்,வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.

ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும் நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.

இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மினிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.

இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.

ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.

இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்?

அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் தான்.

சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு
கீழே என்னுடைய க‌வுஜையை டெடிகேட் செய்கிறேன்.

தட தட சத்தமும்,
வியர்வையுடன் கலந்த டீசல் வாடையும்,
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்,
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்.
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சு ரூபா சில்ற‌ இல்லீயா ??........"


மத்திய தரவர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.

******************************************************************

Monday, May 11, 2009

சில்லறை சித்தாந்தம் !



எப்போது ஆரம்பிக்கும் என்று
அவனுக்கு தெரியவே தெரியாது.

விவரம் தெரிந்த நாளிலிருந்தோ
பொம்மைகளினூடோ
புத்தகப் பையிலோ
பக்கத்து வீட்டு பெண்ணிலோ
வளையல் துண்டுகளிலோ
அலுவலகத்திலோ
படுக்கையிலோ
கனவிலோ
ஏதேனுமொன்றை
தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.

அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது தேடல் மட்டுமே.



Wednesday, May 6, 2009

இஸ்லாத்திலும் சாதிகளை புகுத்தாதீர் !!!!

முஸ்லிம் அல்லாத‌ சகோதரர்கள் மட்டுமின்றி, இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினாலும் இவ்விஷயத்திற்கு நல்லதொரு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மட்டுமே இப்பதிவை எழுதுகிறேன்.

இதை ஒரு பிரச்சார மற்றும் ஒருதலை பட்சமான பதிவு என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.மற்றபடி, "இது ஒரு நல்ல ஆஃபர். அனைவரும் வாங்கி பயனடைவீர்" என்று அறிவிக்க என் வலைப்பூ விளம்பர தளம் அல்ல.

**********************************************************************

ஓரிறை,ஓர் வேத‌ம் என‌ ஏக‌த்துவ‌த்தை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஏன் ஹ‌ன‌பி,ஷாபி(இந்தியாவில்), ச‌ன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக‌ பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ பிரிவினைக‌ளை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா ?? இஸ்லாத்தில் சாதீய‌ம் என்ற‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌தா ??

இதற்கு பதில் "நிச்ச‌ய‌மாக‌ இல்லை" என்ப‌தே.மேலும் இந்த‌ நெறிமுறைக‌ளின் வீரிய‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்.

இத‌ற்கான‌ ஆணித்த‌ர‌மான‌ விடை குர்ஆனில் இருக்கிறது.

"நிச்ச‌ய‌மாக‌ எவ‌ர் த‌ம்முடைய‌ மார்க்க‌த்தை ( த‌ம் விருப்ப‌ப்ப‌டி ப‌ல‌வாறாக‌ப் பிரித்து) ப‌ல‌ குழுக்க‌ளாக‌ பிரிந்து விட்ட‌ன‌ரோ அவ‌ர்க‌ளுட‌ன் (ந‌பியே !) உம‌க்கு எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌முமில்லை;அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்."

6:159 ஸூர‌த்துல் அன் ஆம்.

மேலும் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ன‌து ச‌ந்த‌தியின‌ர் 72 பிரிவுக‌ளாக‌ பிரிந்து பிள‌வுப‌டுவார்க‌ள் என‌ க‌ணித்துள்ளார்.அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌ நெருப்பில் விழ‌க் க‌ட‌வ‌து என‌வும் ச‌பித்துள்ளார்க‌ள்.இவைகள் மட்டுமின்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.

இந்த மத்ஹபுகள் குறித்து ஒரே பதிவில் எழுதுவதென்பது இயலாத காரியம்.
சுருங்கக் கூறின், இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நீட்சியான ஃபிக்ஹு என்னும் சட்டத்தை நான்கு பிரிவுகளாக நான்கு இமாம்கள் உருவாக்கினர்.இமாம் ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி இந்த நான்கும் சன்னி பள்ளியின் கீழடங்கும் சட்டங்கள்..இந்த மத்ஹபுகளை பின்பற்றுவர்கள் நாளடைவில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வழக்கம் போல, குழுமனப்பான்மைக்கே உரிய நடவடிக்கைகளில் இரங்க ஆரம்பித்து விட்டனர்.

சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்ப்பது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.

இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கிறது.மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து.

ஆக‌வே,இஸ்லாம் என்ற‌ ஒரு மார்க்க‌த்தில் பிரிவினைக‌ளும் ஏற்ற‌த்தாழ்வுக‌ளும் இல்லை.சாதிக‌ளோ குழுக்க‌ளோ இல்லை.

யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து ம‌ஸ்ஜிதில் தொழ‌லாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.

குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்தான் தொழுகை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ற உய‌ர்சாதிய‌ கோட்பாடுக‌ள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட‌ யாராக இருந்தாலும் ( விஷ‌ய‌ம் தெரிந்திருக்கும் ப‌ட்ச‌த்தில் ) ம‌றுக‌ண‌மே தொழுகை ந‌ட‌த்த‌லாம்.

மேற்கூறிய ச‌ன்னி,ஷியா,மாலிகி போன்ற‌வை வெறும் கொள்கைக‌ளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களே அன்றி அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது.

மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைக‌ள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.

ஒலிம்பிக்கில் த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் வாங்கிய‌ போது க‌ருப்ப‌ர் என்ற நிற‌வெறியின் கார‌ண‌மாக அமெரிக்க அரசால் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்ட குத்துச்சண்டை வீரர் கேஸிய‌ஸ் கிளே, ஓக்லஹாமா ந‌தியில் த‌ன‌து ப‌த‌க்க‌த்தை தூக்கி வீசிவிட்டு பிற்கால‌த்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு கார‌ண‌ங்க‌ள் இல்லாம‌லில்லை.

*****************************

Tuesday, April 28, 2009

இளமை விகடனில் எனது சிறுகதை


நேற்று காலை நான் பதிவிட்ட "உச்சத்தை தொட்ட தினம்" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.

படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.நன்றி விகடன் !!!!

பதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள்.
குறையொன்றுமில்லை.

Sunday, April 26, 2009

உச்சத்தை தொட்ட தினம்

தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ஆதிமூல கிருஷ்ணன்(தாமிரா) அவர்களுக்கு நன்றி.

இது என்னுடைய முதல் சிறுகதை முயற்சி .நேரமிருந்தால் முழுமையாக படித்து விட்டு பிறகு பின்னூட்டமிடவும்.தொடர்பதிவுக்கு நான் அழைப்பது நண்பர் ஆதவன்.

**********************************************************************************

"வாட்டர் போர்டுல வேலை செஞ்சிண்டுருந்தவர்க்கு இன்னும் நாலு வருஷம் சர்வீஸ் இருந்துச்சு..வி ஆர் எஸ் கொடுத்துட்டூ வர்ற காசுல கடனை அடைச்சிட்டு, இவள ஒருத்தன் கையில புடிச்சி கொடுத்துடலாம்னு ஆசைப்பட்டாரு.நிராசையில போய் சேர்ந்துட்டாரு !!!

தெத்து பல்லா இருந்தாலும் பரவாயில்ல..ஆனா இவ பைத்தியம் பிடிச்ச மாதிரி எங்க போனாலும் நேரங்காலம் தெரியாம வெடிச் சிரிப்பு சிரிச்சி வைக்கிறா.இருபத்தெட்டு வயசாகுது.பொண்ணு பாக்க வர்றவா முன்னாடி இப்படி சிரிச்சி வைச்சே பல வருஷங்கள கடத்திட்டா..பிள்ளையாண்டா ஆத்துக்காரங்க கால் பண்றேம்மானு சொல்வாங்க.. அதோட வர்றவே மாட்டாங்க..பெத்த வயிறு பத்தி எரியுது." குரல் கம்மியது மீனாட்சிக்கு.

வாழ்வின் வண்ணங்களை நான்கு வருடங்களுக்கு முன்பே இழந்து விட்ட மீனாட்சிக்கு ஒரே ஆறுதலாக இருந்தவள் மக‌ள் வித்யா மட்டும் தான்.கணவனை இழந்த பெண்களுக்கு தவறாமல் மறுகணமே அந்த அக்ரஹாரத்தில் அடைமொழி ஆஸ்கர்கள் ரெடியாகிவிடும்.த‌ற்ச‌ம‌ய‌ம் அந்ந ஏளன‌ப் பேச்சுக‌ளும் அவ‌மான‌ங்க‌ளும் அம்மாவிட‌மிருந்து ம‌க‌ள் வித்யாவுக்கு மாற்ற‌ல் ஆகி இருந்தது.வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்தால் கிளம்பும் புற்றீசல் புரளிகளும்,அவதூறு பேச்சுக்களும் கிளப்பி விடுபவர்களுக்கு அலாதி சுகத்தை ஏற்படுத்தி தரும்.

போற வர்றவா கிட்டல்லாம் இத சொல்லி புலம்புறதே அம்மாவுக்கு வேலையா போச்சு.மனதுக்குள் கண்டனக் கடிதம் வாசித்தாள் வித்யா.

"சொல்லும்மா வித்யா..இந்த சிரிப்பு தான் உனக்கு பிரச்சினையா ??" எத்தன நாளா ?"

சாய்வான நாற்காலியில் அந்நியன் அம்பியை நாசர் படுக்க வைத்த மாதிரி வித்யாவை சாய்வாக உட்கார வைத்து விட்டு கவுன்சிலிங் செஷனை ஆரம்பித்தார் டாக்டர் குஞ்சித பாதம்.

வீணையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கம்பிகளை இழுத்தி கட்டியிருப்பது மாதிரி, டாக்டரின் வழுக்கை தலையில் ஒரு காதிலிருந்து மற்றொரு காதிற்கு இருந்த நான்கே முடிகளை வீம்புக்கு இழுத்தி கட்டி வைத்திருந்ததை.. சாரி.. சீவி வைத்திருந்ததை பார்த்ததும் வித்யாவுக்கு வழக்கம் போல அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.

"இப்ப‌டித்தான் டாக்ட‌ர்...எதையாவ‌து நினைச்சுண்டோ..இல்ல‌ எதையாவ‌து பாத்துண்டோ கெக்க‌ பெக்கேனு சிரிக்க‌ ஆர‌ம்பிச்சுட்றா. " மீனாட்சி.
சிறு பிராய‌த்திலிருந்து இந்த‌ சிரிப்பு வியாதி வித்யாவிற்கு ஒரு பெரும் பிர‌ச்ச‌னையாக‌வே இருந்த‌தில்லை.ஆனால் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ இந்த‌ ப‌ழ‌க்க‌ம் முற்றி போய் ஒரு வியாதி போல் ஆகி விட்ட‌து.சிரிக்கும் போது தென்ப‌டும் நீள‌ ப‌ற்க‌ளும் தெரிக்கும் எச்சிலும் பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு அருவ‌ருப்பை ஏற்ப‌டுத்தி விடும்.அப்பா தவறியதிலிருந்து இதுவரை தள்ளிப் போன வரன்களின் எண்ணிக்கை மட்டும் நூறைத் தாண்டும்.

***************************


"அது என்னவோ தெரியலடி..தனியா இருக்கும் போது இந்த கவலையும் அழுகையெல்லாம்..அதுவும் அம்மாவ நினைச்சா மட்டும் தான்.என்ன பத்தி மத்தவா கேவலமா சொல்றத அம்மா கேட்டுட்டூ வீட்டுக்கு வந்து விம்மும் போது தான் எனக்குண்டான பிரச்சனையே எனக்கு தெரியுது."

"வித்யா.நீ கூட இவ்ளோ சீரியஸா பேசுவியா ??" கண்களில் வியப்பு மிளிர கேட்டாள் ஸ்வாதி.

"ஆமாண்டி..நானும் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன்.இந்த பாழாப்போன சிரிப்ப அடக்க..சிரிப்பு வரும் போது, மூச்ச இழுத்து பிடிச்சுட்டு, என்னிக்காவது நடந்த சோக சம்பவத்த நினைச்சுக்கோனு டாக்டர் சொன்னாரு..லைஃப்ல எனக்கு என்னிக்கு தான் சந்தோஷமா நடந்துர்க்கு..னு மனசுல நினைச்சுண்டேன்.

இப்படித்தான் போன மாசம் கோபு மாமா செத்த வீட்டில எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமா நின்னுட்ருந்தா.நம்ம ஃபேஷன் சேன்னல் தாத்தா மட்டும் ஒரு ஓரமா நின்னுட்டூ, ஆபரேசன் பண்ண ஒரு கண்ண மூடிட்டு, ஸ்டைலா சுருட்டு புடிச்சிட்டுருந்தத பாத்தவுடனே கொல்லுனு சிரிப்பு வந்துட்டுது.ஓடிப்போய் உள்ரூம்ல தலவாணில முகத்த புதைச்சிண்டு நான் பாட்டுக்கு சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.எல்லாரும் நான் குழுங்குறத பாத்துட்டு "என்னமா அழுவுறா..பாருங்கோ !!!....இருக்காதா பின்ன..சின்ன வயசுலர்ந்து வளர்த்தவர் இல்லையா"னு தப்பா நினைச்சுட்டா..தப்பிச்சோம்டானு நானும் அப்படியே மெயிண்டெய்ன் பண்ணிட்டு முகத்த அலம்பிண்டு கிளம்பிட்டேன்"

"சரி அதவிட்ரீ..நம்ம விச்சு பூனூல் கல்யாணத்துல மந்திரம் சொல்ல வந்தான்ல நம்ம வரது மாமா பையன்..நீ கூட விச்சு காதுல அவன் காயத்ரி மந்திரம் சொல்றச்ச அவன் குடுமிய பாத்து கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருந்தியே !!"

"ஆமா அவனுக்கு என்ன இப்ப..அன்னிக்கு என்ன பாத்து முறைச்சிட்டே இருந்தான்..
ஏதாவது பிரச்சினையாயிடுச்சா..? " வித்யாவுக்கு ஆர்வம் மேலிட்டது.

"அதெல்லாம் ஒன்னுமில்லடி..அவன் நம்ம ஆபிஸ் தான்..அதுவும் என்னோட புரொஜக்ட் தான்..நேத்து தான் அவன பாத்து ஐடன்டிஃபை பண்ணேன்.அவன் உன்ன பத்தி தான் கேட்டுட்ருந்தான்.ஏதோ நீ ஜாவா ஆர்டிக்கல் எழுதியிருந்தியாமே..அத பத்தி உன் கிட்ட கூட பேசணும்னு சொன்னான்.." பொடி வைத்தாள் ஸ்வாதி.

*******

அன்று உஜாலா வேட்டியில் டாப்லெஸ்ஸில் இருந்த‌வ‌ன், வான்யூஸ‌ன் மாட‌ல் போல ம‌ல‌ர்ந்த‌ முக‌த்தோடு அம‌ர்ந்திருந்த‌வ‌னை பார்த்த‌தும், வித்யாவின் க‌ண்க‌ள் அவ‌ன் குடுமியை தேட‌ ஆரம்பிக்க‌ துறுதுறுத்த‌ன‌.

"என் பேரு வைத்திங்க‌..விச்சு உப‌ந‌ய‌ன‌த்துல‌ தான் உங்க‌ள‌ முத‌ல் த‌ட‌வையா பார்த்தேன்.விச்சு உங்க‌ள‌ ப‌த்தி நிறைய‌ சொல்லியிருக்கான்.உங்க‌ளுக்கு இன்னும் க‌ல்யாண‌ம் ஆக‌லைன்னும் கேள்விப் ப‌ட்டேன்"

"ச‌ரி இப்ப என்ன‌ சொல்ல வ‌ர்றீங்க !! டைர‌க்டா சொல்லிடுங்கோ.." வித்யாவுக்கு ஆர்வ‌ம் தொற்றி கொண்டாலும் வெளி காட்டி கொள்ள‌வில்லை.

"உங்க‌ள‌ நேக்கு ரெம்ப‌ பிடிச்சிருக்கு" ச‌ட்டென்று போட்டுடைத்தான் வைத்தி.

"இத‌ பாருங்கோ உங்க‌ளுக்கு என் மேல‌ இருக்க‌றது ப‌ரிதாப‌ம். இது ல‌வ் தான்னு நீங்க‌ நினைச்சீங்க‌ன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல‌..சாரி !!!" வைத்தியின் அடுத்த‌ ப‌திலுக்காக‌ காத்திருக்காமல் கிள‌ம்பினாள் வித்யா.

தன்னைக் கூட காதலிக்க இப்பூவுலகில் ஒரு ஜீவன் இருக்கிறதா என்ற அதிர்ச்சியிலிருந்து மீள வித்யாவுக்கு வெகுநேரம் ஆனது.அந்த புதிய அனுபவம் அவளுக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை தந்தது.முதல் முறையாக கண்ணாடி முன் ஒருமுறை நின்று புன்னகைத்து பார்த்தாள்.அவள் முகத்தில் சற்றே அழகு கூடியிருந்தது.கன்னம் சிவந்திருந்தது.

முதல்முறை பார்த்தவுடனே காதலில் விழுபவனை எப்படி நம்புவது? என்ற கேள்வி தான் அவளை வியாபித்திருந்தது.ஆனாலும் பட்டென்று அப்படி அவனிடம் சொல்லியிருக்க கூடாது என்ற சுயபச்சாதாபம் அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்தது.ஆனாலும் என்னவோ மனம் மதில் மேல் பூனையாகவே நின்று கொண்டிருந்தது.

அவன் மனசு சங்கடப் பட்டிருப்பானா ?? இல்ல..இவ ரொம்ப திமிர் பிடிச்ச பொண்ணுனு கழட்டி விட நினைச்சிருப்பானா ?? இல்ல திரும்பவும் நாளைக்கு கேஃபிடேரியால பேச முயற்சி பண்வானா ??

அன்றைய இரவு முழுதும் வித்யாவுக்கு சர்வம் வைத்தி மயம்.

சொல்லி வைத்தாற் போல மறுநாள் மீண்டும் அவன்.

"அதெப்படி உங்களுக்கு முதல் பார்வையிலே லவ் வரும்??..எனக்கென்னமோ இது சரியா படல" கொஞ்சம் சாரீரத்தை சற்றே தளர்த்தினாள் வித்யா.

"நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் லவ் @ பர்ஸ்ட் சைட் இல்லீங்க..!!!" வைத்தியின் பதிலில் கனம் இருந்தது.

"போன மாசம் டவுன்ஹால் மீட்டிங்ல பிரசிடண்ட் பேசிட்ருக்கும் போது சத்தம் போட்டு சிரிக்கிற வெகுளி பொண்ணாவும் உங்கள பாத்துர்க்கேன்.

அதே நேரம் ஆந்திர மெஸ் வாசல்ல பசின்னு வந்து பிச்சை கேட்டுட்டுருந்த ஒரு அந்த சின்ன பொண்ணுக்கு உங்க டிபன் பாக்ஸை கொடுத்துட்டு, பிரண்ஸோட ஷேர் பண்ணி சாப்பிட்ற பெரிய மனசுக்காரியாவும் உங்கள பாத்துர்க்கேன்.

அப்பவே நீங்க தான் என்னோட லைப் பார்ட்னர்னு முடிவு பண்ணிட்டேன்.இதுல என்னங்க தப்பு இருக்கு..நீங்களே சொல்லுங்க வித்யா"

இத்தனை நாள் தொலைத்திருந்த வாழ்வை அவள் கண்களுக்குள் ஊற்றி வைத்தான் வைத்தி.

"சரி என்ன நல்லா பாத்துப்பியா" தழுதழுத்த குரலில் வித்யா.

"ட்ரை பண்றேன்டியம்மா !!!" வைத்தி.

முதல்முறையாக வித்யாவுக்கு அழுகை வரத்துடித்தது.அவனை கட்டியணைத்து கொள்ள வேண்டும் போல இருந்தது.க‌ண்ணீர்த்திரை அவள் கண்களை மறைத்தது.

அதனால் என்ன‌ ? அவ‌ன் தான் உள்ள‌த்தில் விசுவ‌ரூப‌ம் எடுத்து நிற்கிறானே !!!


*******************************************************************************

Sunday, April 5, 2009

அந்த‌ முத‌ல் ச‌ந்திப்பு (பாக‌ம்-2)



பாக‌ம்-1 ப‌டிக்க இங்கேசொடுக்குக

மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.

முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.

ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!

நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.

வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.

"வ‌ந்து ரொம்ப‌ நேர‌ம் ஆச்சா ??" நான்.

"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌" அவள்.

விடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின் தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....

அன்று சனிக்கிழமை மதிய நேரமாக‌ இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.

அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.

காத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.

ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.

கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்

முதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்த‌தை நினைவூட்டினேன்.

"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.."

"ப்ளீஸ்..ப்ளீஸ்..என‌க்காக‌ ஒருமுறை"

"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."


வடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த செய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."


( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)

Wednesday, March 4, 2009

கண்டினியுட்டி இல்லா கவிதை

முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப் பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..

உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் ப‌த்திர‌மாக‌
ப‌த‌ப்படுத்திக் கொள்ள‌
மீண்டும் மீண்டும் முய‌ன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.

கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்
அந்த ஒற்றை இரவில்...

அவ‌ள் அழுகை
ச‌த்த‌மாக சிரிக்கத் தொட‌ங்கிய‌து
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.

'எங்கிருந்தாலும் வாழ்க' வென‌
விய‌ங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க‌ இல‌க்க‌ண‌ம் ம‌ற‌ந்துபோன‌து
இருவரின் மொழியிலும்.

பெருங்கூச்சலிட்ட நிசப்த‌
சாரீரங்களை கொண்ட‌
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.

Monday, February 16, 2009

அந்த முதல் சந்திப்பு



"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"


எல்லா காதலர்களின் முதல் சந்திப்புமே இது போன்ற ஏக்கப் பிரகடனங்களில் தான் ஆரம்பிக்கும்.நாங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.

இடம்:ஆள் அரவம் அதிகம் இல்லா ஒரு ரயில் நிலையம்.
நேரம்: மதியம் 1.30 முதல் கெஞ்சல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை.

அவசரம் அவசரமாய் எல்லாம் ஒன்றுமில்லை.மதியம் பன்னிரெண்டை தொடுமுன் கடிகார முட்களை மானுவலாக திருப்பாத குறை தான்.

கருஞ்சாம்பல் நிற ஜீன்ஸ்,பிராண்டட் சட்டை,ரீபோக் ஷுஸ்,ப்ரில் கீரீம்,ஆக்ஸ் ஸ்பிரே மற்றும் சில புன்னகைகள் என்னை ஒரு புதிய பரிமாணத்தில் ஆயத்தமாக்கி கொண்டிருந்தன. போருக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.

ஒரு வழியாக படியாத தலைமுடியை படிய வைத்து சீவி கிளம்பியாகிவிட்டது.வேண்டுமென்றே முதல் ரெண்டு ரயில்களைத் தவற விட்டு,மூன்றாவது ரயிலில் அமர்ந்தவனுக்கு நேற்று அலைபேசியில் அவளிடம் பரிமாறிய குறுந்தகவல்கள் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வந்தன.

"நான் தான் முகத்தை மறைத்திருப்பேனே..என்னை எப்படி கண்டு பிடிப்ப ??"

"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""

அதற்குள் அலைபேசி அதிர.. அவளாகத் தானிருக்கும்..அவளே தான்..

"எங்கடா இருக்க ??"

"பழவந்தாங்கல் கிட்ட வந்துட்டேன்..இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.நீ எங்க இருக்க?"

"நான் மீனம்பாக்கம் வந்து 15 வருஷம் ஆச்சுடா..சீக்கிரம் வா..நான் இங்க ஒரு போன் பூத் பக்கத்தில நிக்கிறேன்."


"சரி..அங்கயே வெயிட் பண்ணு...வந்துட்றேன்."

இந்த பத்து நிமிட இடைவெளியில் நான் அவளோடு...அந்த அற்புத கணங்களை எப்படி செலவிடப் போகிறேன் என ஒரு சராசரி காதலனாய் மனதுக்குள் சில ஒத்திகைகள் நடந்தேறின.

நிச்சயம் அவள் கண்களைப் பார்த்து தான் பேச வேண்டும்.அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அவள் புன்னகைக்கும் போது,

"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"

என்ற ஒரு அரிய கேள்வியெழுப்பி அவளின் முதல் செல்ல அடிகளையும் மற்றும் சில'முதல்'களையும் பரிசில் பெற வேண்டுமெனத் தீர்மானித்து கொண்டேன்.

இப்படி கைவசம் இருந்த பலப்பல பிட்டுகளின் பட்டியல் நீண்டது.

இரண்டு முறை அவளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவள் "அவளாக" இருந்த போது.....இப்போது அந்த அவள் "என்னவள்" ஆகிவிட்டாள் அல்லவா?.
மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் நடுக்கமும் கூடிய ஒரு புதுவித படபடப்பு தொற்றி கொண்டது.இருவரும் காதலைச் சொன்னபிறகு நிகழப் போகும் முதல் சந்திப்பு என்பதால் ஒரு கூடுதல் குறுகுறுப்பு.

வாங்கி வைத்திருந்த மினரல் வாட்டரால் முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் ஒருமுறை தலை வாரிக் கொண்டேன்.

மீனம்பாக்கமும் வந்தாகிவிட்டது.படபடப்பு அதிகரித்தது.முகத்தில் வழிவது தண்ணீரா வியர்வையா என்றெல்லாம் பட்டிமன்றம் வைக்காமல்,கண்கள் மட்டும் என்னவளைத் தேட ஆரம்பித்தன.

( அடுத்த பாகம் விரைவில் )

Saturday, January 31, 2009

கவிதை எழுதுவது எப்படி ??

முன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் ப‌டித்து முடித்த‌வுட‌ன் காரி உமிழ‌க் கூடாது.

கடந்த ஒரு வாரமாக வலைச்சர ஆசிரியர் பொறுப் பேற்றிருந்த நம் அதிரை ஜமால் அவர்கள்,வலையுலகின் தலைசிறந்த கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருந்தார்.அந்த கவிப்பேரரசுகளின் படைப்புகளை படித்து விட்டு,எல்லோருக்கும் ஏற்படுவதைப் போல், நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என உள்ளுக்குள் இருந்த பட்சி பீதியை கிளப்பியது.

"பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி
"................எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்...

ஆனா ஒரு க‌ண்டிச‌ன்...

இந்த‌ க‌விதைய‌ எழுதி முடிக்க‌ற‌ வ‌ரைக்கும் ந‌ம்ம‌ புதியவ‌ன்,ச‌ர‌வ‌ண‌க்குமார்..அய்ய‌னார் இந்த‌ மாதிரி பெரிய‌வா ஆத்துப்ப‌க்க‌ம் த‌ல‌ வெச்சி ப‌டுக்க‌ப் ப‌டாது.மீறி ப‌டுத்தால் இவர்களின் பாதிப்பு ந‌ம்மையும் தொற்றிக் கொள்வ‌தோடு ம‌ட்டுமின்றி,ந‌ம் மூளையும் செக‌ண்ட் ஹேண்ட் மூளையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று குத்த வைத்திருந்த அதே பட்சி குறி சொல்லிற்று.

எல்லாவ‌ற்றையும் ம‌ன‌த்தில் இறுத்திக் கொண்டு,மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்....

எதைப் பற்றி எழுதுவது ??? மனம் கொஞ்ச நேரம் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது....ஆஆ..காதல்......

கழுத கெட்டா குட்டிச் சுவர்..அட டைட்டில் இதயே வச்சிர்லாம் போல..வேணாம்..கவிதைனா படிப்பவர்கள் மனதைப் பிழிய வேண்டும்.
ஆகவே முதல் முத்தம்..பிரிவு சோகம்..இப்படி எழுதினால் எமோஷனல் வொர்க் அவுட் ஆக கூடும் என்பதால் நம் கற்பனை வண்டிக்கு கிருஸ்னாயில் ஊற்றி, டாப்கியரில் தூக்கினோம்.

கண்ணீர்.......oooo

அழுகை......(ஆஹா...)

பிரிவு.......

வலி.........(ஆஹா...)

வ‌ருது ..வ‌ருது....விடாத‌...( அதே ப‌ட்சி என்க‌ரேஜ் செய்ய ஆர‌ம்பித்த‌து )

வான‌ம்...

நீல‌ம்...ம்ம்ம்ம்ம்...

நாற்ற‌ம்....
....
...( கொட‌ல‌ பொற‌ட்டுதுடா சாமி...!!!!!!!)
என்னாச்சு....யாருப்பா அது...எங்கோ பெருச்சாளி செத்த‌ வாடை மூக்கினுள் உட்புகுந்து மூளையை க‌டித்து குத‌ற‌ ஆர‌ம்பிக்க‌..அலுவல‌க‌த்தில் ஒரு க‌ண‌வான் த‌ன் காலுறையை க‌ழ‌ற்றி வைத்ததால் ஏற்ப‌ட்ட‌ விஷ‌வாயு தான் அது என்று தெரிவிக்க‌ப் ப‌ட்டு அதிருப்தி வெளியிடப்ப‌ட்ட‌து.

நமது வால்பையனின் ஒரு பதிவில் "பெருச்சாளி" என்ற பெயரில் அனானியாக‌ சென்று பின்னூட்டியது நினைவுக்கு வர, அவர் இட்ட சாபம் தான் பிற்பகலில் விளைகிறது என மனம் நொந்து கொண்டு....

மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்...

"அவள் அழுகையும்
கண்ணீரும்
அந்த எலிச்செத்த நாற்றத்தில்
மறைந்து போனது"


அப்படினு அடுத்த லைன் எழுத, பக்கத்தில் அமர்ந்திருந்த பட்சியின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

சரி...முடிஞ்சி போன பத்தி எதுக்கு பேசுவானேன்..கொஞ்சம் கமர்ஷியலா யோசிங்க பாஸ்...எப்படி...நம்ம தர்மு சிவராமு எழுதியிருந்தாரே !!!

"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு
"

இப்படி சிவராமு யோசிக்கலாம்..நாம் யோசித்தால் கமர்ஷியல் எந்த கோணத்தில் போகும் என்று உமக்கு தெரியாதா ?? ஆரம்பிக்கும்போதே ரிஸ்க் எடுப்பது உசிதமல்ல‌ என்று அந்த சூனியக்கார பட்சிக்கு விடையளித்தேன்."வேண்டுமென்றால் ஒரு க‌ண்காட்சி க‌விதை எழுத‌லாம்."

க‌ண்காட்சி க‌விதையென்ப‌து புதுக்க‌விதையில் ஒரு வ‌கை.இங்கு க‌விதையின் க‌ருத்திய‌லோடு அத‌ன் உருவ‌மும் முக்கிய‌த்துவ‌ம் பெறுகிற‌து.க‌விதையில் கூற‌வ‌ரும் பொருளும் உருவ‌மும் இறுகிச் செறிந்திருக்க‌ வேண்டும்.பொருளையும் உருவ‌த்தையும்
பிரிக்க‌ முடியாத‌ப‌டி பிணைந்திருக்க‌ வேண்டும்.

எடுத்துக் காட்டாக எஸ்.வைத்தீஸ்வரனின் "ஆசை" என்ற கவிதையைச் சொல்லலாம்.

"முதுகு வளர‌
நீ
ண்
டு
விட்ட‌
கூந்தலுக்கு
மேலும் வளரத்
துடிதுடிப்பென்ன..
"

ஆகவே, உள்ளடக்கத்தின் ஆதிக்கம் உருவத்தில் புலப்பட வேண்டும்.வெகு சமீபத்தில் நம் தேவா எழுதிய‌ கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது! கண்காட்சி வகை கவிதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.

என்று நாம் அதன் சாராம்சங்களை விளக்க,
(ப‌ட்சியின் புற‌த்திலிருந்து ஒரு ஆங்கில ப‌ட‌த்தின் ட்ரெயிலர் ஓடிக்கொண்டிருந்த‌து..க்க்க்கொர்,...ர்ர்ர்ர்ர்....தூங்கிட்டானா ??)

ஆஹா..இது நமக்கு ஒத்துவரக்கூடும் என நானும் பட்சியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி,மீண்டும் நம் கற்பனை வண்டியின் ஆக்ஸிலரேஷனைத் திருக்கினோம்.டைரியை க‌க்கத்தில் இறுக்கிக் கொண்டு,ரத்த வெறியோடு யோசித்துக் கொண்டே சென்று என்னைய‌றியாம‌ல் லேடிஸ் ரெஸ்ட் ரூமின் க‌த‌வைத் திற‌ந்து வைத்தேன்.

SORRY FOR THE BREAK !!!!!!!!!!!!!

ந‌ல்ல‌ வேளை.அங்கே ஜீன்ஸ் போட்ட‌ பைங்கிளி ஒன்று ம‌ட்டும் க‌ண்ணாடி முன்பு சோப்பு போட்டு முக‌ம் க‌ழுவிக் கொண்டிருந்த‌ ப‌டியால்,ம‌யிரிழையில் நாம் உயிர் த‌ப்பினோம்.( எங்க‌ அந்த‌ ப‌ட்சி ப‌ய‌ புள்ள....எஸ் ஆயிட்டானா...)அதோடு அபசகுனம் கருதி அந்த கண்காட்சி கவிதை முயற்சியும் கைவிடப்பட்டது.

ச‌ரி க‌டைசியாக‌ யாருக்கும் புரியாம‌ல்,உண‌ர்த்தும் முறையில் ஒரு காம்பிளக்க்ஷ‌னைச்செருகி, ஒரு ப‌டிம‌க் க‌விதையெழுத‌லாம் என இறுதி முடிவு நானே எடுத்தேன்.ச‌ர‌வ‌ண‌குமார்,அய்ய‌னார் இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டிம‌க் க‌விதையெழுதுவ‌தில் கை தேர்ந்த‌வ‌ர்க‌ள் என்பதை க‌ருத்தில் கொள்ள‌வேண்டும்.என‌வே,அவர்க‌ளின் பாதிப்பு வ‌ர‌க்கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

ஸ்டார்ட் மீமீசிக்...

"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் நான் எழுதிய இந்த படிமக்கவிதையை, வலைதளம் ஆரம்பித்து "தவம்" என்று பெயரிட்டு பதிவிட்ட போது.. கிடைத்த ஒரே ஒரு பின்னூட்டத்தை எண்ணி, கண்ணில் ஒரு துளிநீர் எட்டிப் பார்த்து, அப்பீட் ஆனது....அந்த ஒற்றைப் பின்னூட்டமிட்ட அந்த புண்ணியவானைத் தான் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ச‌ரி க‌விதையெழுதுவ‌து எப்ப‌டி ??

அது தெரிஞ்சிருந்தாத்தான் ஒரு கவிதைய போட்டிருப்ப‌ம்ல‌..இவ்ளோ பெரிய‌ விள‌க்க‌ம் எதுக்குன்ன‌ ??(போங்க‌..போங்க‌.போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌..!!!!! )

Saturday, January 17, 2009

ஒரு குழந்தையும் 3 தகப்பன்மார்களும்


முன் ஜாமீன்: இது ஒரு வரலாற்றுப் பதிவோ,இல்லை சேகரிக்கப் பட்ட செய்திகளின் தொகுப்போ அல்ல.என்னுடைய தனிப்பட்ட கோபத்தின் விளைவு தான் இந்த பதிவு. கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.
*********************

ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞர் எழுதுகிறார்.ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர். 1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே. அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை. பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த‌ இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறதுமேலும் அவ‌ர் எழுதிய‌வ‌ற்றிலிருந்து,

"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."

"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"


*******************************

மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன். *ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய‌ சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்ற‌ன‌ என்பதே அந்த‌ ம‌னித‌ உரிமை க‌ழ‌க‌ங்க‌ளுக்கு தெரியாதாம். *குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய‌ ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும் ஆம்புல‌ன்ஸ் ஊர்திக‌ளையும் தான் பிர‌தான் இலக்காக‌ கொண்டு தாக்கி வ‌ருகிற‌து.
*ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க‌ வேண்டுமென்றால்,அந்த‌ நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமான‌து என்ப‌தை ந‌ன்கு அறிந்த‌ இஸ்ர‌வேல‌ர்க‌ள்,ஒரே வார‌த்தில் பால‌ஸ்தீன‌த்தின் 61 காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளை கொன்று குவித்திருக்கின்ற‌ன‌ர்.
*நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய‌ நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச்சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன. உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இன்று இருபது லட்சம் பேர் இராக்கில் அனாதையாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் விதவைகளும் குழந்தைகளுமே அதிகம்.ஆப்கன் நிலைமை இதை விட மோசம்.
"என் நாட்டில் அனாதையாக்கப் பட்ட குழ‌ந்தைக‌ளின் சார்பாக‌வும் வித‌வைக‌ளின் சார்பாக‌வும் உனக்கு நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்டே தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன்தாதர் அல்ஸ‌ய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்ப‌டுத்துவ‌து ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ?? பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.
***************************************************************
என்மனதை பிழிந்த புகைப்படங்கள் கீழே !!!!!








Friday, January 16, 2009

ஒரு குழந்தையும் 3 தகப்பன்மார்களும்


கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.
ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞ்ர் எழுதுகிறார்."ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்ட கால நிலையில்,அவர்களுக்கு புகலிடம் அளித்தது இஸ்லாமிய நாடான துருக்கி தான்.

1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே.

அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை.

பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த‌ இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது
மேலும் அவ‌ர் எழுதிய‌வ‌ற்றிலிருந்து,
"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."

"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"

மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன்.

ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய‌ சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்ற‌ன‌ என்பதே அந்த‌ ம‌னித‌ உரிமை க‌ழ‌க‌ங்க‌ளுக்கு தெரியாதாம்.

குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய‌ ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும் ஆம்புல‌ன்ஸ் ஊர்திக‌ளையும் தான் பிர‌தான் இலக்காக‌ கொண்டு தாக்கி வ‌ருகிற‌து.ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க‌ வேண்டுமென்றால்,அந்த‌ நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமான‌து என்ப‌தை ந‌ன்கு அறிந்த‌ இஸ்ர‌வேல‌ர்க‌ள்,ஒரே வார‌த்தில் பால‌ஸ்தீன‌த்தின் 61 காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளை கொன்று குவித்திருக்கின்ற‌ன‌ர்.நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மைக்கு எடுத்துக் காட்டு.சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய‌ நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச் சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன.

உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இருபது லட்சம் மக்கள் இன்று இராக்கில் அனாதைகளாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் அதிகம் விதவைகளும் குழந்தைகளுமே ஆவர்.
"அனாதையாக்கப் பட்ட விதவைகளின் சார்பாக நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்து தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன் தாளிர் சய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்படுத்தியது ஒருவித மயான அமைதியை தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்து விட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ??

பாதிக்கப் படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons