"நான் விரும்பாத இந்த அடையாளத்தை எதைக் கொண்டு அழிப்பேன்? பாம்பு தன்
சட்டையை உரித்தெறிவது போல இந்த என் உடலைக் கழட்டி எறிய முடிந்தால்
எத்தனை நன்றாக இருக்கும்? என் சுயம்,என் அடையாளம்,என் உணர்வுகள்,
என் கனவுகள்,என் உயிர் எப்படி மீட்கப் போகிறேன் ?ஆயிரம் அவமானங்கள்,கோடி ரணங்கள்,கிண்டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன் !
அனைத்தையும் மீறி நீண்ட என் பயணத்துக்கு ஒரே ஒரு அர்த்தம் தான்.எனக்குப்
பொருத்தமான உடலை நான் கண்டெடுத்து விட்டேன். !"
Sunday, July 19, 2009
livingsmile


0 comments:
Post a Comment